பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
சந்தைப் போட்டியை சமாளிக்க வருகிறது ஒன்பிளஸ் 13எஸ்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ’ஒன்பிளஸ் 13எஸ்’ விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது இந்திய இளைஞர்களுக்கு ஈர்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோனுக்கு போட்டியாக, ’உயர் விலை ஸ்மார்ட்ஃபோன் சந்தைகளில்’ தனி இடத்தைப் பிடித்துள்ளன ஒன்பிளஸ் ஸ்மார்ட்ஃபோன்கள். இப்போது, அந்த வரிசையில் இடம்பிடிக்க காத்திருக்கிறது ’ஒன்பிளஸ் 13எஸ்’ மாடல்.
உலக சந்தைக்கு இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோன் ஒன்றும் புதிய வரவல்ல. ஏற்கெனவே சீனாவில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ’ஒன்பிளஸ் 13டி’ மாடல், இந்திய சந்தைகளில் ’ஒன்பிளஸ் 13எஸ்’ பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது. கறுப்பு(பிளாக் வெல்வெட்), பிங்க்(பிங்க் சட்டின்) ஆகிய இரு நிறங்களில் ’ஒன்பிளஸ் 13எஸ்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
குவால்கம்ன் நிறுவனத்தின் அதிவேக செயல்திறனுள்ள ’ஸ்நாப்டிராகன் 8 எலைட்’ சிப் அமைந்துள்ள, ‘6.32 இன்ச்’ தொடுதிரையுடன் அதிவேக செயல்திறனுடன் கூடிய கையடக்கமான ஒரு ‘ஃபிளாக்ஷிப்’ ரக ஸ்மார்ட்ஃபோன் மாடலே இந்த ’ஒன்பிளஸ் 13எஸ்’.
’ஸ்நாப்டிராகன் 8 எலைட்’ சிப் ’12 ஜிபி | 16 ஜிபி ரேம்’ மற்றும் அதிகபட்சமாக ’1 டிபி சேமிப்பு திறன்’ உள்ளது(மாடலைப் பொறுத்து). ’அட்ரிநோ 830 ஜிபியு’ கிராஃபிக்ஸ் சிப்பும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் உள்ளது.
இதிலுள்ள ஏ.எம்.ஓ.எல்இடி தொடுதிரை 1600 நிட்ஸ் ஒளிதிறனுடன் கூடியது. திரைக்கு கூடுதல் பாதுகாப்பாக வழங்கப்பட்டுள்ள ’ஓப்போ கிறிஸ்டல் ஷீல்டு கிளாஸ்’, தொடுதிரை எளிதில் உடையாத அளவுக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பின்பக்கத்தில் இரு கேமரா, அதில் முதன்மை கேமராவில் ஓஐஎஸ் உடன் கூடிய ’50 மெகாபிக்ஸல் சோனி ஐ.எம்.எக்ஸ்906 சென்சார்’ உள்ளது. ’50 எம்.பி. 2x டெலிஃபோட்டோ லென்ஸ்’ இருப்பதால் புகைப்படங்களும் விடியோ தரமும் ’பளிச்’ ரகம்தான்...
முன்பக்க கேமரா ’16 எம்.பி.’ தரத்தில், இதன்மூலம், ’1080 பிக்ஸல்’ தரத்தில் 30 எஃப்.பி.எஸ். ப்ரேம்-ரேட்டில் விடியோக்களைப் பதிவு செய்யலாம்.
ஆப்டிகல் கைரேகை சென்சார்(வழக்கம்போல தொடுதிரையில் அமையப்பெற்றிருக்கும்), அதில் கூடுதல் சிறப்பம்சமாக வாட்டர்-ஃப்ரூஃப் பாதுகாப்பும் தூசு பாதுகாப்பும் (‘ஐபி65’) இந்த சென்சாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டிராய்டு 15 இயங்குதளத்தின்கீழ் ‘கலர் ஓஎஸ் 15’ இந்த ஸ்மார்ட்ஃபோன் இயங்குகிறது. வெளிப்புற பட்டன்களூம் கொடுக்கப்பட்டுள்ளன. இருபக்க ஸ்டீரியோ ஒலி தரத்திலான ஸ்பீக்கர்களும் உள்ளன.
6,260 எம்.ஏ.எச். திறனுடன் கூடிய பேட்டரி அமையப்பெற்றுள்ளதால் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தாலே, ஒன்பிளஸ்ஸின் இந்த புது மாடல் ஒருநாளைக் கடந்தும் இயங்கும். 80 வாட்ஸ் பவர் அதிவேக சார்ஜிங் வசதி உள்ளது.
சீனாவில் விற்பனையாகி வரும் ’ஒன்பிளஸ் 13டி’ 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை 3,399 யுவான்(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 39,636).
இன்னொருபுறம், ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு போட்டியாக இதே அளவு செயல்திறன் மற்றும் அம்சங்களுடன் கூடிய பிற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்ஃபோன்களான ’ஐஃபோன் 16’, ’சேம்சங் கேலக்ஸி எஸ்25’, ’க்ஸவ்மி(ரெட்மி) 15’, ’ஓப்போ பைன்ட் எக்ஸ்8’ ஆகியவை ரூ. 60,000-க்கும் மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தை போட்டியை சமாளிக்க ரூ. 50,000 க்கும் சற்று கூடுதல் விலையில் ’ஒன்பிளஸ் 13எஸ்’ விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம்போல, ‘ஆமெஸான்’ ஆன்லைன் விற்பனை தளத்திலும், ஒன்பிளஸ் நிறுவன ஆன்லைன் தளம் மற்றும் அதன் விற்பனை கடைகளிலும் இந்த ஸ்மார்ட்ஃபோன் வெகுவிரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.