செய்திகள் :

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

post image

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது.

சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன

இந்த ஆண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 3 பேருக்கு பத்ம பூஷண்

தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது

குருவாயூர் துரை (கலை)

கே.தாமோதரன் (சமையல் கலை)

லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் - கல்வி - இதழியல்)

எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - பொறியியல்)

புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை)

ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு - கிரிக்கெட்)

ஆர். ஜி. சந்திரமோகன் - (தொழில்துறை)

ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை)

ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி)

வேலு ஆசான் (கலை, பறை இசை)

இதேபோன்று கேரளத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஸுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஆந்திரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

இசைத் துறையில் ரிக்கி கேஜ், அர்ஜித் சிங், சேகர் கபூர் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு உயிரிழந்த பங்கஜ் உத்தாஸுக்கு அவரின் மறைவுக்குப் பிறகு கெளவரம் வழங்கப்பட்டது. அவருக்கான விருதை அவரின் மனைவி பெற்றுக்கொண்டார்.

மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல்... மேலும் பார்க்க

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு!

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்க நீலகிரி வரையாடு திட்ட... மேலும் பார்க்க

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நடத்தப்படுகிறது.சென்னையில் ஏற்கனவே முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 2... மேலும் பார்க்க