செய்திகள் :

மலையாள இயக்குநர் ஷாஜி என். கருண் காலமானார்!

post image

திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என்.கருண் இன்று(ஏப். 28) காலமானார். அவருக்கு வயது 73

1970 காலகட்டங்களில் மலையாள திரைத்துறை முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்த ஷாஜி என்.கருண் பல நாள்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

பிறவி, ஸ்வாஹம், வனபிரஸ்தம் உள்பட இவரது திரைப்படங்கள் பல, விருதுகள் பல வாங்கி சிறப்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில சாலசித்திர அகாதெமி, கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகுபலி மீண்டும் திரைக்கு வருகிறது: அக்டோபரில் மறுவெளியீடு!

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் சஸ்பென்ஸுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் மறுவெளியீடாக திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இ... மேலும் பார்க்க

கைகொடுத்ததா, சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் கம்பேக்? - கேங்கர்ஸ் திரை விமர்சனம்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுந்தர் சி, வடிவேலு காம்போவில் ஒரு கலகலப்பான எண்டர்டெய்னருக்கான எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். பழைய காம்போ கம்பேக் கொடுத்து கலக்கியதா?கதைக்களம் என்ற... மேலும் பார்க்க

பல்வேறு பாகங்களாக உருவாகவிருக்கும் மகாபாரதம்: இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர் கான்

மகாபாரத காப்பியத்தை கதைக்களமாகக் கொண்டு நடிகர் ஆமிர் கான் ‘மகாபாரத்’ என்ற பெயரில் திரைப்படத்தை படமாக்கப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.அண்மையில் அவர் அளித்துள்ளதொரு பேட்டியில், மேற்கண்ட தகவலை ஆமிர் ... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திர... மேலும் பார்க்க

திரைப்படத் தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார்!

சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் எம்.ராமநாதன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த எம். ராமநாதன் உடல் நலக்குறைவால் ... மேலும் பார்க்க

மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் ட்ரைலர் வெளியானது!

டாம் க்ரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் படத்தின் புதிய ட்ரைலர் இன்று வெளியானது.ஆக்‌ஷன் திரைப்பட பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான மிஷன் இம்பாசிபல் படத்தின் வரிசையில் 8-வது படமாக அத... மேலும் பார்க்க