போப் இறுதிச் சடங்கு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!
பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் விஷ்ணு விஷால்!
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.
இந்தநிலையில், இந்த தம்பதியின் 4-ஆம் ஆண்டு திருமண நாளில் அவர்தம் குடும்பத்தில் புதிய உறுப்பினராக பெண் குழந்தை இணைந்திருப்பதை அவர் பதிவிட்டுள்ளார்.