Serial Update: `இது ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்!' கர்ப்பமானதை அறிவித்த நடிகை தர்ஷனா
`நீதானே எந்தன் பொன்வசந்தம்' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷனா அசோகன். அந்தத் தொடர் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தர்ஷனா ஜீ தமிழில் `கனா' தொடரில் நடித்திருந்தார். திருமணத்திற்காக அந்தத் தொடரில் இருந்து விலகினார். தர்ஷனாவிற்கும் அபிஷேக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தர்ஷனா தொடர்ந்து நடிப்பாரா? என அவருடைய ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தர்ஷனா ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்திருக்கிறார்.

அபிஷேக் பல் மருத்துவர். தர்ஷனாவும் அதே துறையைச் சார்ந்தவர் தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது தர்ஷனா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.
அதில், `எங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளில் எங்களுடைய குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற சந்தோஷ செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இது ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்!' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகர்கள், அவருடைய ரசிகர்கள் எனப் பலரும் தர்ஷனா - அபிஷேக் தம்பதிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் தர்ஷனா - அபிஷேக்!