அக்யூஸ்ட் படத்தின் டீசர்!
நடிகர்கள் யோகி பாபு, அஜ்மல் நடித்துள்ள அக்யூஸ்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கன்னட இயக்குநரான பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அக்யூஸ்ட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, அஜ்மல், உதயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஜீஷன் ஸ்டூடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரடக்ஷன்ஸ், மிய் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
’கோ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான அஜ்மல் கடைசியாக தமிழில் விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.
வெற்றிப் படங்கள் அமையாததால் தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமென்று மட்டுமே டீசரில் குறிப்பிட்டுள்ளது.