செய்திகள் :

எஸ்.வி. சேகர் யாரென்றே தெரியாது! அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஷோபனா கருத்து!

post image

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மீனாட்சி சுந்தரம் தொடரில் எஸ்.வி. சேகருக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்கிறார்.

76 வயதான எஸ்.வி. சேகருக்கு 26 வயது நடிகை ஜோடியாக நடிப்பதா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பிவந்த நிலையில், மீனாட்சி சுந்தரம் தொடரின் முன்னோட்டக் காட்சியைக் கண்டு பலரும் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டனர்.

மனைவியை இழந்த சுந்தரம் என்ற முதியவர், மகன், மருமகள், பேரன் என பலர் இருந்தும் தனக்காக ஒரு துணையைத் தேடிக்கொள்கிறார். கணவனை இழந்து திருமண வயதில் பெண் இருக்கும் மீனாட்சி என்ற பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக்கொள்கிறார் எஸ்.வி. சேகர்.

பலரைக் கவரும் வகையில் இந்த முன்னோட்டம் இருந்ததால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே எஸ்.வி. சேகருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நடிகை ஷோபனா மனம்திறந்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, எஸ்.வி. சேகர் முதலில் யார் என்றே தெரியாது. ஜீன்ஸ் படத்தில் நடித்திருப்பாரே அவரா? என்றுதான் நினைவுபடுத்திக்கொண்டேன். எஸ்.வி. சேகர் என்றால் என் பாட்டிக்கு மிகவும் பிடிக்குமாம். நான் என் பாட்டியைப் பார்த்தது இல்லை. அதனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம் என் பாட்டி எனக்கு நினைவுக்கு வருவார். இதனால் அவரை நான் ஒரு ஏஞ்சல் போலவே பார்க்க ஆரம்பித்துவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஷோபனா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பூங்காற்று திரும்புமா என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் சின்ன திரையில்...

நாடகக் கலைஞரான எஸ்.வி.சேகர், நினைத்தாலே இனிக்கும் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வறுமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, கோபுரங்கள் சாய்வதில்லை ஆகிய பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் அரசியலில் நேரடியாக ஈடுபட்டுவந்த எஸ்.வி. சேகர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார்.

மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடிகை ஷோபனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமூக ஊடகங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் முக்கியமான இயக்குநராக மாறியுள்ளார். விஜய்யுடன் மாஸ்டர... மேலும் பார்க்க

லாரியஸ் 2025 விருதுகள்: ரிஷப் பந்த் தேர்வாகவில்லை, லாமின் யமால், ரஃபேல் நடாலுக்கு விருது!

இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பு லாரியஸ் விருதுக்கான போட்டியாளா்களின் பெயா்களை சா்வதேச அளவில் விளையாட்டுத்துறை சாா்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன.லாரியஸ் உலக விளையாட்டு அகாதெம... மேலும் பார்க்க

பிக் பாஸ் புகழ் ரைசா நடித்த படம் என்னவானது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை ரைசா வில்சன் நடித்த காதலிக்க யாரும் இல்லை படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 2019ஆம் ஆண்டே படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்... மேலும் பார்க்க

செல்லமே அல்ல, தங்க மீன்கள்: பெயர் மாற்றப்பட்ட ரேஷ்மாவின் சீரியல்!

நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கவுள்ள புதிய தொடரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலில் செல்லமே எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தங்க மீன்கள் என மாற்றப்பட்டுள்ளது. நடிகை ராதிகா நடிப்பில் செல்ல... மேலும் பார்க்க