Samodu Vilayadu : `அவங்க வருத்தப்படுவாங்க... அதனால இப்ப அதை சொல்லல!' - சாம் விஷால் ஷேரிங்ஸ்
மீடியா மேசன்ஸ் யூடியூப் தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சி `சாமோடு விளையாடு (Samodu Vilayadu)'. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமான சாம் விஷால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். `சாமோடு விளையாடு சீசன் 4' செட்டில் சாம் விஷாலை சந்தித்துப் பேசினோம்.

`சூப்பர் சிங்கர்' சர்ப்ரைஸ்
" `சூப்பர் சிங்கர்' ஆடிஷனுக்கே நான் அப்ளை பண்ணல. முறைப்படி மியூசிக் கத்துக்கலைங்கிறதனால எப்படி அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிறதுன்னு தயங்கினேன். தீபன்னு என் ஃப்ரெண்ட் எனக்குத் தெரியாம நான் பாடின பாடல்களை ஆடிஷனுக்கு அனுப்பி வச்சிட்டான். அப்படி என் லைஃப்ல எதிர்பாராம நடந்த சர்ப்ரைஸ் தான் `சூப்பர் சிங்கர்'.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட ரன்னர்அப் ஆனேன். ஷோ முடிஞ்சதும் நிறைய கான்செர்ட் போய் மக்களை நேரடியா சந்திக்கலாம்னு எதிர்பார்த்திட்டிருந்த சமயத்துல கொரோனா வந்துடுச்சு. அந்த சமயத்துல தான் ரவூஃபாம்மாகிட்ட இருந்து ஃபோன் வந்துச்சு. திடீர்னு ஆங்கரிங் பண்றியான்னு கேட்டாங்க. எனக்கு பயங்கர ஷாக் ஆகிடுச்சு. ஆனாலும், ரவூஃபாம்மாவும் ப்ரத்தீமா மேமும் என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க. அவங்க என் மேல வச்ச நம்பிக்கை தான் இப்ப நான்காவது சீசன் வரைக்கும் வந்திருக்கு.
விஜே சித்து அண்ணாவும், ஹர்ஷத் அண்ணாவும்!
ஆரம்பிக்கும் போது விர்ச்சுவல் ஆகத்தான் ஆரம்பிச்சோம். மக்கள் கொடுத்த ஆதரவினால் தான் இன்னைக்கு தனியா இந்த ஷோவுக்காகவே செட் போட்டு பண்ற அளவுக்கு வந்திருக்கு. மா கா பா அண்ணா, பிரியங்கா அக்கா, விஜய் அண்ணாகிட்ட இருந்து ஆங்கரிங் சார்ந்த நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்!" என்றவரிடம் `நாங்க செட்டுக்கு வந்தப்ப ரவூஃபா மேமும், ப்ரத்தீமா மேமும் கன்டெஸ்டன்ட் ஆக இருந்தாங்களே?'னு கேட்டோம்.

" இப்ப நடந்து முடிஞ்ச எபிசோட் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். தாங்க்ஸ் கிவ்வீங் எபிசோட் ஆக இது அமைஞ்சது. ஹோஸ்ட் பண்ண மாதிரியே இல்ல. ஜாலியா இருந்தது!" என்றவர் தொடர்ந்து பேசினார்.
" முதல் சீசன்ல கலந்துகிட்டவங்க அடுத்த சீசனுக்கும் கூப்பிடு... கண்டிப்பா வர்றோம்னு சொல்லிட்டு போறாங்க. அது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. மக்கள் எல்லாரும் விஜே சித்து அண்ணாவும், ஹர்ஷத் அண்ணாவும் கலந்துக்கணும்னு விரும்புறாங்க. அவங்க ஏற்கனவே வந்திருந்த எபிசோட் பயங்கர ஹிட். நாங்களும் அவங்ககிட்ட கேட்டிருக்கோம். இப்ப கொஞ்சம் பிஸியா இருக்காங்க. ஆனா, கண்டிப்பா வர்றதா சொல்லியிருக்காங்க!" என்றவரின் பர்சனல் பக்கங்கள் குறித்துக் கேட்டோம்.
யுவன் சார் மியூசிக்ல பாடின பாட்டு..!
" இன்டிபென்டன்ட் சாங்ஸ் வரிசையா ரிலீஸ் ஆக இருக்கு. `காலம் நேரம்'னு ஒரு சாங் பண்ணியிருக்கேன். அது சீக்கிரமே வர இருக்கு. கடைசியா பண்ணியிருந்த `ஏங்குகிறேன்' ஆல்பம் பலருக்கும் பிடிச்சிருந்தது. ஶ்ரீநிஷாவுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும். அவங்க லிரிக் எழுதியிருக்காங்க, பாடியிருக்காங்க அதோட முதன்முதலா நடிச்சும் இருக்காங்க. அதுக்காக அவங்களுக்கும், அவங்க அப்பா அம்மாவுக்கும் நன்றி சொல்லியே ஆகணும்.
யுவன் சார் மியூசிக்ல பாடின பாட்டு சீக்கிரமே ரிலீஸ் ஆகப் போகுது. நிம்ஷின்னு தெலுங்கு மியூசிக் டைரக்டருக்குப் பாடியிருக்கேன் அதே மாதிரி காசிஃப் ப்ரோவுக்கும் பாடியிருக்கேன். இன்னும் முக்கியமான 2,3 பேருக்கு பாடியிருக்கேன். ஆனா, அது வர்றப்பத்தான் தெரியும். ஒரு வேளை பாட்டு வரலைன்னா முன்னாடி இருந்து என்னை ஃபாலோ பண்றவங்க வருத்தப்படுவாங்க... அதனால இப்ப அதைப் பற்றி சொல்லல!" என்றார்.
சாம் விஷால் இன்னும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!