ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? ச...
சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!
சிவகங்கை: சிவகங்கை - மதுரை சாலையில் செம்பூர் காலனி அருகே டீசல் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த இரண்டு லாரிகள், அரசுப் பேருந்து மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை காலை 21 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை நோக்கிச் சென்ற டீசல் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே மதுரை நோக்கி வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
டீசல் லாரியைப் பின்தொடர்ந்து வந்த எரிவாயு லாரியும் அரசுப் பேருந்து மீது மோதியதில், மூன்று வாகனங்களும் நொறுங்கி சாலையோரப் பள்ளத்தில் இறங்கின.
இந்த விபத்தில் டீசல் லாரி ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம், தொட்டி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சீ. நந்தகுமார் (21) மற்றும் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் காயமடைந்தனர்.
திருப்புவனம், பூவந்தி மற்றும் சிவகங்கை பகுதிகளில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்பு துறையினர் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிவகங்கை - மதுரை சாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.