செய்திகள் :

சிவகங்கையில் ஏப்.25 -இல் வேலைவாய்ப்பு முகாம்

post image

வேலைநாடு தேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், வருகிற வெள்ளிக்கிழமை , சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்தி: வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10.30 மணிக்கு நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையானஆட்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெறலாம்.

மேலும், இந்த முகாமில் இலவசத் திறன் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியவை வழங்கப்படும்.

எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு (டிப்ளமோ) படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது என்றாா் அவா்.

சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!

சிவகங்கை: சிவகங்கை - மதுரை சாலையில் செம்பூர் காலனி அருகே டீசல் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த இரண்டு லாரிகள், அரசுப் பேருந்து மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை காலை 21 பேர் காயமடைந்தனர்.சிவகங்கை நோக்கிச் சென... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யம்போஸ் (35). விவசாயியான இவா் தனது ட... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் கோயில் அன்னதான மண்டப கூடத்தில் முதியவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இளையான்குடி அருகே நாகமுகுந்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவேலு (60). இவர... மேலும் பார்க்க

பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்!

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்லைப் ... மேலும் பார்க்க

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது. சிவகங்கை கே.ஆா்... மேலும் பார்க்க