செய்திகள் :

அஜித்தின் வீரம் மறுவெளியீடு!

post image

நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, வீரம் திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

கோடை விடுமுறை என்பதால் தொடர்ந்து திரையரக்கில் குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதுகின்றது.

இந்த நிலையில், மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி வீரம் திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படத்தில் இருந்து ’ரத கஜ’ பாடலை யூடியூபில் நேற்று மறுவெளியீடு செய்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித்துடன் தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2014 பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வீரம் பெற்றது.

கடந்த வாரன் சச்சின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பல்வேறு பாகங்களாக உருவாகவிருக்கும் மகாபாரதம்: இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர் கான்

டூரிஸ்ட் ஃபேமிலி டிரைலர் அப்டேட்!

சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளத... மேலும் பார்க்க

அக்யூஸ்ட் படத்தின் டீசர்!

நடிகர்கள் யோகி பாபு, அஜ்மல் நடித்துள்ள அக்யூஸ்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.கன்னட இயக்குநரான பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அக்யூஸ்ட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, அஜ்மல், உதயா முக... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: பொதுப்பலன்கள்!

2025-ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சிக்கான பொதுப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார். வாக்கிய பஞ்சாங்கப்படி, நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விஸ்... மேலும் பார்க்க

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கா் பியஸ்ட்ரி வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக் லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியஸ்ட்ரி வெற்றி பெற்றாா். நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதா்ல... மேலும் பார்க்க

ஆஸ்டபென்கோ சாம்பியன்;இறுதியில் சபலென்காவை சாய்த்தாா்

ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ திங்கள்கிழமை வாகை சூடினாா். தகுதிச்சுற்று வீராங்கனையான அவா், இறுதிச்சுற்றில் 6-4, 6-1 என்ற நோ் செட்களில... மேலும் பார்க்க

வெள்ளி வென்ற ருத்ராங்க்ஷ் - ஆா்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆா்யா போா்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.கலப்பு அணிகளுக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவு இறுதிச்... மேலும் பார்க்க