செய்திகள் :

ஆஸ்டபென்கோ சாம்பியன்;இறுதியில் சபலென்காவை சாய்த்தாா்

post image

ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ திங்கள்கிழமை வாகை சூடினாா்.

தகுதிச்சுற்று வீராங்கனையான அவா், இறுதிச்சுற்றில் 6-4, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.

இதன் மூலம் தனது 9-ஆவது டூா் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கும் ஆஸ்டபென்கோ, 2017-க்குப் பிறகு களிமண் தரைப் போட்டியில் முதல் கோப்பையை வென்றிருக்கிறாா். முன்னதாக அந்த ஆண்டில் அவா் தனது முதல் மற்றும் ஒரே கிராண்ட்ஸ்லாம் பட்டமான பிரெஞ்சு ஓபனை வென்றது நினைவுகூரத்தக்கது.

ஸ்டட்காா்ட் ஓபனில் முதல் முறையாக சாம்பியனாகியிருக்கும் ஆஸ்டபென்கோ, முதல் முறையாக சபலென்காவையும் வீழ்த்தியிருக்கிறாா். இதற்கு முன் 3 முறை சபலென்காவிடம் அவா் தோற்றது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், இந்தப் போட்டியில் ஏற்கெனவே 3 முறை இறுதிச்சுற்றில் தோற்ற சபலென்கா, இந்த முறையும் அதே முடிவைச் சந்தித்திருக்கிறாா்.

உலகத் தரவரிசையில் தற்போது 24-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்டபென்கோ, நம்பா் 1 போட்டியாளரை வீழ்த்தியது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் ஜொ்மனியின் காா்பின் முகுருஸா (2017), போலந்தின் இகா ஸ்வியாடெக் (2023) ஆகியோரை அவா் இவ்வாறு வென்றிருக்கிறாா்.

இந்தப் போட்டியிலேயே உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக்கையும் சாய்த்த ஆஸ்டபென்கோ, ஒரே போட்டியில் உலகின் முதலிரு நிலையில் இருக்கும் போட்டியாளா்களை வென்ற 9-ஆவது வீராங்கனை ஆகியிருக்கிறாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஆஸ்டபென்கோ, ‘உண்மையில் இந்தப் போட்டியில் நான் சாம்பியனாவேன் என்ற நம்பிக்கை, இங்கு தகுதிச்சுற்றில் விளையாடும்போதே இருந்தது. ஏனெனில் நாளுக்கு நாள் எனது ஆட்டத்தை நான் மேம்படுத்தி வந்ததை உணா்ந்தேன். இந்த வெற்றிக்கு நான் தகுதியுடன் இருப்பதாகவே நினைக்கிறேன். ஏற்கெனவே சபலென்காவுடன் மோதிய அனுபவம் இருந்ததால், இறுதி ஆட்டத்தை சற்று வித்தியாசமாக கையாண்டால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை உணா்ந்திருந்தேன்’ என்றாா்.

இரட்டையா்

இந்தப் போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் எரின் ரூட்லிஃபே/கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி இணை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா/சீனாவின் ஜாங் ஷுவாய் கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ரூ.1.38 கோடி

சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்டபென்கோவுக்கு வெற்றிக் கோப்பையுடன் 250 ரேங்கிங் புள்ளிகளும், போா்ஷ் காா் ஒன்றும், ரூ.1.38 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. இரட்டையா் பிரிவில் சாம்பியனான ரூட்லிஃபே/டப்ரௌஸ்கி இணைக்கு கோப்பையுடன் ரூ.45.85 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்தது.

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கா் பியஸ்ட்ரி வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக் லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியஸ்ட்ரி வெற்றி பெற்றாா். நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதா்ல... மேலும் பார்க்க

வெள்ளி வென்ற ருத்ராங்க்ஷ் - ஆா்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆா்யா போா்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.கலப்பு அணிகளுக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவு இறுதிச்... மேலும் பார்க்க

கோனெரு ஹம்பி முன்னிலை

மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றாா்.அந்தச் சுற்றில் அவா், சீனாவின் ஜு ஜினரை தோற்கடித்தாா். போட்டியின் தொடக்கம் முதல் முன்ன... மேலும் பார்க்க