Travel contest: 'த்ரில்லிங்கான வாகமன் ஜீப் சவாரி' - முதல் சுற்றுலா அனுபவத்தைப் பகிரும் பள்ளி மாணவி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு அழகிய மலைப்பகுதி வாகமன். இதை ஆசியாவின் ஸ்காட்லாந்து என்று அழைப்பர்.
இங்கு அமைந்துள்ள பசுமையான நிலங்கள், மஞ்சள் மலைகள் மற்றும் அமைதியான சூழல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வியக்க வைக்கச் செய்கின்றன.
மேலும், இங்கு வரும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை மறக்கச் செய்கின்றன.
இங்கு உள்ள குளிர்ந்த காற்று, ஜீப் சவாரி, பைன் காடுகள் போன்றவை அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் எண்ணற்ற புதிய அனுபவங்களையும் தருகின்றன.
அப்படி மகிழ்ச்சியாகத் தொடங்கிய ஒரு பயணம் எப்படி முடிந்தது, அங்குச் செல்வதற்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்று பார்ப்போம். நாங்கள் மொத்தமாக ஏழு பேர்தான்.

நண்பர்களாகச் சேர்ந்து முடிவெடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கினோம். எல்லோரும் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருந்தோம்.
ஏனென்றால் அதுதான் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்கும் முதல் இடம், சாப்பிட நிறைய தின்பண்டங்கள் பையிலும் ,மனதில் அவ்வளவு எதிர்பார்ப்புடனும் தொடங்கினோம்.
12 மணி நேரம் 40 நிமிடங்கள் இரயில் பயணம், சரியாக யாரும் தூங்கக் கூடவில்லை. அடுத்த நாள் பார்க்கப் போகும் இடங்கள், கண்ணுக்கு முன் வந்து வந்து சென்றன.
கோட்டயம் ரயில் நிலையத்தை அடைந்த பின் அங்கிருந்து வாகமன் சென்றோம். போகும் வழியிலேயே குளிரத் தொடங்கிவிட்டது. ஒரு போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டோம்.
பின்னர் ஒரு ரிசார்டில் ரூம் புக் செய்தோம். அங்கிருந்து ஜீப் சவாரியில் வாகமானைச் சுற்றிப் பார்க்க உற்சாகமாகக் கிளம்பினோம்.
பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறம் தெரிந்தது. அடர்ந்த காடுகள், அருவிகள், மரங்கள். செடிகள், சுத்தமான காற்று அனைத்தும் மனதை உருக்கின.
மலைப்பகுதிகளுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்து, சந்தோஷமாகப் பேசி சிரித்துக் கொண்டு இருந்தோம்.

அப்போது ஒரு குரல் கேட்டது, 'இங்க எல்லாரும் வாங்க இவ காலிலிருந்து ரத்தமா வருது'. இதைக் கேட்டு எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு சென்றோம்.
அங்குச் சென்று பார்க்கும் போதுதான் தெரிந்தது அது ஒரு லீச்சின் செயல் என்று. ஆனால் அவளுக்கு வலிக்கவே இல்லை என்று கூறினாள்.
லீச் என்பது உடலில் உள்ள கெட்ட ரத்தத்தை எடுத்துவிடும் வலியைக் கொடுக்காமல் என்று தெரிய வந்தது.
பின்னர் அதற்குத் தேவையான முதல் உதவியைச் செய்தோம். ஜீப் சவாரி பயங்கரமாகவும் உற்சாகம் நிறைந்ததாகவும் இருந்தது.
அங்கு இருக்கும் கடைகளில் தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள் வாங்கினேன். அங்கிருந்து 'Glass bridge' சென்றோம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அங்குப் பார்த்த அருமையான காட்சிகள், இன்னும் என் நினைவில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இரண்டாம் நாள், மேலும் சுவாரசியமாக இருந்தது.
எல்லோரும் Pine forest-க்குச் சென்றோம். நுழையும் போதே நிறையக் கடைகள் இருந்தன. சாப்பிடும் பொருட்கள், அழகான பொம்மைகள், கை பைகள், துணிகள், தோடுகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். காட்டுக்குள் போன பிறகு, சுற்றிலும் உயரமான மரங்கள்.

வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கப் பொருத்தமான இடம், அப்படிச் சொல்ல மாட்டேன் இயற்கையை ரசிக்க ஒரு அற்புதமான இடம்.
பின்னர் கேரளா சென்றோம் என்று நிரூபிக்க அங்கு மிகவும் பிரபலமான நேந்திரம் சிப்ஸ் வாங்கினோம். அது மட்டுமல்ல குடும்பத்திற்குப் பிடித்த பொருட்களையும் வாங்கினோம்.
இப்படியாக எங்கள் பயணம் முடிந்தது. ஆனால் இதைத் தொடர்ந்து இன்னும் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். அங்கு அணிந்து கொள்ளக் குளிருக்கு அடக்கமான துணிகள், மலைகளில் லீச்சுகள் இருக்கும் அதனால் கொஞ்சம் அணியும் காலணிகளில் கவனம் தேவை.
என் நண்பர்களில் சிலருக்குக் குளிரினால் உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. அதனால் தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
கடைசியாக நான் சொல்ல விரும்புவது, உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பயணிக்க ஒரு அருமையான அழகான இடம் இது.
நாள்தோறும் செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் நீங்கள் வாழும் இந்த பூமியில் உள்ள வியக்கத்தக்க இடங்களுக்குச் சென்று மகிழுங்கள் நண்பர்களே!
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.