கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் என்றும், இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (எண். 06190), சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பகல் 12.30 மணிக்கு வந்தடையும்.
மறுவழித்தடத்தில், பிற்பகல் 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் (எண். 06191), செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம் வழியாக திருச்சியை இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.
2 ஏசி சேர் கார், 6 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட 20 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படவுள்ளன.
செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படவுள்ளன.
