செய்திகள் :

``உயிரோட வீட்டுக்கு போயிடுவியா..'' - நீதிபதிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் மிரட்டல்

post image

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆறு வருடமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது.

இறுதிகட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுல் குமார், ``எனது தரப்பு நபர் 63 வயது ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். அவருக்கு வேலையில்லாத மூன்று மகன்கள்தான் இருக்கின்றனர். எனவே அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

நீதிமன்றம்

அதைத் தொடர்ந்து நீதிபதி ஷிவாங்கி மங்களா, ``குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 22 மாத சிறைத்தண்டனை விதித்து, காசோலை மோசடி வழக்கில் ரூ.6.65 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.

அப்போது தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர், ``நீயெல்லாம் ஒரு ஆளு... நீ எனக்கு ஒன்னுமே இல்லை... வெளியே வா, எப்படி உயிரோட வீட்டுக்குப் போறனு பாக்கலாம்... எனக்கா தண்டனை எழுதுற" என உச்சக்கட்ட ஆத்திரத்தில் கத்தி மிரட்டினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி ஷிவாங்கி மங்கலா எழுதிய தீர்ப்பில், ``குற்றவாளியும், வழக்கறிஞரும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர், மேலும் அவர்கள் இருவரும் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கவும் துன்புறுத்தினர். தேசிய மகளிர் ஆணையத்தில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கறிஞர் அதுல் குமாருக்கு, அவரது நடத்தைக்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக வழங்கவும், தவறான நடத்தைக்காக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும் வேண்டும்" என உத்தரவிட்டார்.

IAF: தாக்கப்பட்டாரா இந்திய விமானப் படை வீரர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ஷிலாதித்ய போஸ் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. கடந்த 18-ம் தேதி ஷிலாதித்யாவும் அவரது மனைவி மதுமிதாவும் விமான நிலையத்திற்கு செல்லும் போது, க... மேலும் பார்க்க

திருமணத்தில் `ஊதா கலர் டிரம்' கிப்ஃட்; `மீரட் கொலை' நினைவால் மணமகன் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து கடந்த மாதம் தன் கணவரை கொலை செய்தார். அதோடு கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி அதனை ஊதா கலர் டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு மூ... மேலும் பார்க்க

Samantha: `ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்?' - சமந்தா லைக் செய்த வீடியோ

சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ 'டைரி ஆஃப் எ சிஇஓ' என்ற youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டது. அந்த வீடியோவில் 'ஆண்க... மேலும் பார்க்க

``தண்ணீர் பஞ்சத்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை.." - தண்ணீரை பூட்டி வைக்கும் கிராமத்தினர்

நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் அதிக பட்ச வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: தன்னை அழைப்பதாக எண்ணி கையைத் தூக்கியவருக்கு ஆப்ரேஷன்; வைரலான சம்பவத்தில் நடந்தது என்ன?

தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் ... மேலும் பார்க்க

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்த... மேலும் பார்க்க