செய்திகள் :

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

post image

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய விண்ட்ஹோக் பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், ஸ்ரீமத் பகவத் கீதை, பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் உள்ளிட்ட புதிதாக 74 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

கஜேந்திர சிங் ஷெகாவத்
கஜேந்திர சிங் ஷெகாவத்

இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தன் எக்ஸ் பக்கத்தில், ``பாரதத்தின் நாகரிக பாரம்பரியத்திற்கான ஒரு வரலாற்று தருணம்! ஸ்ரீமத் பகவத் கீதை, பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் இப்போது யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த அங்கீகாரம் இந்தியாவின் நித்திய ஞானத்தையும், கலை மேதைமையையும் கொண்டாடுகிறது. இந்த காலத்தால் அழியாத படைப்புகள் இலக்கியப் பொக்கிஷங்களை விட மேலானவை. ஏற்கெனவே இந்த சர்வதேச பதிவேட்டில் நம் நாட்டிலிருந்து 14 கல்வெட்டுகள் உள்ளன." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை வரவேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்! யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்திற்கும், வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமாகும். கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தையும் உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறம் உலகத்துக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Anurag Kashyap: `அனுராக் கஷ்யப் மன்னிப்பு கேட்கவில்லை எனில்..!’ - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந... மேலும் பார்க்க

தொடரும் மர்மம்: முடி உதிர்ந்து வழுக்கையான கிராமத்தில் நகம் சேதமடைந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷெகாவ் தாலுகாவில் உள்ள நான்கு கிராமங்களில் மக்களின் தலையில் இருந்து திடீரென முடி உதிர ஆரம்பித்தது. மொத்தம் மொத்தமாக முடி உதிர்ந்து ஒட்டுமொத்த தலையே வழுக்கையான... மேலும் பார்க்க

Rs 50-crore dog: "அந்த நாய் ரூ.50 கோடியெல்லாம் இல்லைங்க" - அமலாக்கத் துறை சோதனையில் வெளிவந்த உண்மை

பெங்களூரைச் சேர்ந்த எஸ்.சதிஷ் என்ற நபர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச்... மேலும் பார்க்க

கார் 4 கோடி; நம்பர் 46 லட்சம் - கேரளாவை அசரவைத்த CEO; பின்னணி என்ன?

லிட்மஸ் சிஸ்டம்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் வேணு கோபாலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர். சமீபத்தில் இவர், கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே அதிக விலைக்கு நம்பர் பிளேட்டை ... மேலும் பார்க்க

`போலி பனீர்' ஷாருக்கான் மனைவி நடத்தும் உணவகத்தில் கலப்படம்? -யூடியூபர் புகார்; கெளரி கான் விளக்கம்

மும்பையில் பிரபலங்கள் நடத்தும் ரெஸ்டாரண்ட்மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ... மேலும் பார்க்க

Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட... மேலும் பார்க்க