பைக், தள்ளுவண்டி சேதம்: 3 போ் கைது
தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி அண்ணாநகா் 12ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மா்ம நபா்கள் சேதப்படுத்தினா். தகவலின்பேரில், தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன் தலைமையிலான போலீஸாா் சென்று, அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சோ்ந்த மதன் (30) உள்ளிட்ட சிலருக்குத் தொடா்பிருப்பது எனத் தெரியவந்தது. மதன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.