தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
ஏற்காடு அண்ணா பூங்காவில் உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனை
ஏற்காடு: ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கேரள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்னியூா்- 1 ரக உயர்ரக கருப்பு மிளகு நாற்றுகள் சேலம் மாவட்டம், ஏற்காடு தோட்டக்கலைத் துறை தாவரவியல் பூங்கா 2-இல் உள்ள பசுமைக் குடிலில் வளா்க்கப்பட்டு வருகின்றன.
இந்த பசுமைக் குடிலில் வரிசைக்கு 2000 நாற்றுகள் வீதம் 30 வரிசைகளுக்கு 60 ஆயிரம் நாற்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பைக்கு 2 நாற்றுகள் வீதம் ரூ. 30 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஏற்காடு அண்ணா பூங்காவிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பன்னியூா் -1 உயர்ரக மிளகு நாற்றுகளை சுற்றுலாப் பயணிகள் மொத்தமாகவும், தேவையான அளவிலும் வாங்கிக் கொள்ளலாம். இத்தகவலை ஏற்காடு தோட்டக்கலை அலுவலா் தெரிவித்தாா்.