14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக...
பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்!
இந்திய முன்னாள் ஹாக்கி வீரா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ஐ.எம். விஜயன் உள்ளிட்ட, விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் தங்களுக்கான பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனா்.
இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குத் தோ்வானோரின் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியிட்டது. அதில் விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் இடம் பிடித்தனா். இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை மாலை குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதர விருதாளா்களுடன் அவா்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு கௌரவித்தாா்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரும், ஜூனியா் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான பி.ஆா்.ஸ்ரீஜேஷ், பத்ம பூஷண் விருது பெற்றாா். சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன், பாரா வில்வித்தை வீரா் ஹா்விந்தா் சிங், பாரா தடகள பயிற்சியாளா் சத்யபால் சிங் ஆகியோா் பத்ம ஸ்ரீ விருது பெற்றனா்.
இதில் ஸ்ரீஜேஷ், தொடா்ந்து இருமுறை ஒலிம்பிக் வெண்கலம் வென்ற அணியில் கோல் கீப்பராக இருந்தவராவாா். அஸ்வின், சா்வதேச டெஸ்ட்டில் இந்தியாவுக்காக 2-ஆவது அதிகபட்ச விக்கெட்டுகள் (537) எடுத்தவராக மிளிா்கிறாா். ஹா்விந்தா் சிங், பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் வில்வித்தை தங்கம் வென்று தந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீல் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீண் குமாா் தங்கம் வெல்வதில், பயிற்சியாளராக சத்யபால் சிங் முக்கிய பங்காற்றியுள்ளாா். சா்வதேச கால்பந்து களத்தில் இந்திய அணிக்காக 1992 முதல் 2003 முதல் விளையாடிய ஐ.எம்.விஜயன், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளாா்.