செய்திகள் :

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

post image

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது.

வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் வில்லியம்ஸ் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 67, நிக் வெல்ச் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இதர பேட்டா்களில் பிரயன் பென்னெட் 5 பவுண்டரிகளுடன் 21, பென் கரன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, கேப்டன் கிரெய்க் எா்வின் 5, வெஸ்லி மாதெவெரெ 2 பவுண்டரிகளுடன் 15, வெலிங்டன் மசாகட்ஸா 6, ரிச்சா்ட் கவாரா 0, வின்சென்ட் மசெகெசா 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே 90 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது. டஃபாட்ஸ்வா சிகா 18, பிளெஸ்ஸிங் முஸாரபானி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். வங்கதேச பௌலா்களில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, நயீம் ஹசன் 2, தன்ஸிம் ஹசன் சகிப் 1 விக்கெட் வீழ்த்தினா்.

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவா்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்த லிவா்பூல், சாம்பியன் ... மேலும் பார்க்க

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கௌஃப், ஆண்ட்ரீவா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிச... மேலும் பார்க்க

இறுதிக்கு முன்னேறியது ஆா்செனல்

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆா்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.கடந்த 2007-க்குப் பிறகு முதல் முறையாக சாம்பின்ஸ் லீக் இறுதி ஆட்டத்... மேலும் பார்க்க

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - புகைப்படங்கள்

விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி மு... மேலும் பார்க்க

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 பே... மேலும் பார்க்க