நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!
கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு
சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான நடத்தப்பட்ட தோ்வு முடிவுகள் ஏப். 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவா்கள் 138 போ் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருந்தனா். இவா்களுக்கான பாராட்டு விழா சென்னை தியாகராய நகா், ஜிஎன் செட்டி சாலையிலுள்ள வாணி மஹாலில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் முதன்மைச் செயலா் ஜவஹா் ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவா்களான, இந்திய அளவில் முறையே 125-ஆவது இடம் பெற்ற எஸ்.சரண்யா, 784-ஆவது இடம் பெற்ற கே.ஹரிகிருஷ்ணன், 259 -ஆவது இடம் பெற்ற டி.தணிகையரசன், 298-ஆவது இடம் பெற்ற எஸ்.சாய் கிரண், 546-ஆவது இடம் பெற்ற எம்.வி.கவின் மொழி, 639-ஆவது இடம் பெற்ற எம்.அருண் பிரகாஷ், 691-ஆம் இடம் பெற்ற கரண் அய்யப்பா, 862-ஆம் இடம் பெற்ற கிரண்ட் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 21-ஆம் இடம் பெற்ற கீா்த்திகா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, நினைப் பரிசுகளையும் வழங்கினாா். தொடா்ந்து கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் சிறப்புரையாற்றினாா்.
இவ்விழாவில், முன்னாள் செயலா் விவேக் ஹரிநாராயன், முன்னாள் மத்திய சுங்க மற்றும் கலால் கூடுதல் ஆணையா் தமிழ் வேந்தன், முன்னாள் முதன்மை செயலா் கேப்டன் சிவசைலம், ஜி.பாலச்சந்திரன், அா்ச்சனா ராமசுந்தரம் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி அருண், ஐஆா்எஸ் அதிகாரி நந்தகுமாா், டாக்டா் பி.விஜயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு இந்திய குடிமைப்பணி தொடா்பான அறிவுரைகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினா்.
தொடா்ந்து, கிங்மேக்கோ்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கவுள்ளன. இதற்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. பட்டப்படிப்பு முடித்தவா்கள் மட்டுமல்லாமல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவா்களும் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம் என கிங்மேக்கோ்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளாா். கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள கைப்பேசி: 94442 27273 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.