செய்திகள் :

ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு!

post image

நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன் ஆழப்புழாவிலுள்ள ரிசார்ட் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மலையாள சினிமா பிரபலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்த்தாக ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து, அவர் குறிப்பிட்ட நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி மற்றும் இளம் மாடல் நடிகை சௌம்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் கலால் துறை அதிகாரிகள் நேற்று (ஏப். 28) நடத்திய 10 மணிநேர விசாரணையில் மூன்று பேருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இவர்கள் தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டில் இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை தொடுபுழாவிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கலால் அதிகாரிகள் சேர்த்துள்ளனர். குடும்பத்தினரின் ஒப்புதலுடனே இது நடந்துள்ளது.

அங்கு, சாக்கோ சில மாதங்கள் சிகிச்சையில் இருப்பார் என்றும் அவர் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் கலால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீநாத் பாசி மற்றும் சௌம்யா ஆகியோரை விசாரணையிலிருந்து விடுவித்துள்ளனர். தேவைப்பட்டால், இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் இம்மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றும் கலால்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்

செவ்வாயில் வந்த கிருத்திகை: சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.வழக்கமாக செவ்வாய் மற்றும் கிருத்திகை நாள்களில் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அல... மேலும் பார்க்க

ஜன நாயகன் டீசர் எப்போது?

விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. ஆயிரகணக்காd பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவ... மேலும் பார்க்க

டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் அப்டேட்!

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் திரை விமர்சகர் கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது. வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்ட... மேலும் பார்க்க

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவா்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்த லிவா்பூல், சாம்பியன் ... மேலும் பார்க்க