செய்திகள் :

"ஊர்ந்து எனச் சொன்னால் உறுத்துகிறதா? தவழ்ந்து என மாற்றுங்கள்" - அதிமுகவின் அமளிக்கு ஸ்டாலின் பதில்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான கேள்வி - பதில் விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது சட்டம் ஒழுங்கை சரியில்லை என்று திமுக ஆட்சியை விமர்சித்துப் பேசிய அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அரசு தலை நிமிர்ந்து இருக்கிறதா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்" என்று பேசியிருந்தார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊர்ந்துதான் சென்றது" என்று பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் ஸ்டாலின்

'ஊர்ந்து' என்ற வார்த்தையால் கோபமடைந்த அதிமுக-வினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு அந்த வார்த்தையை நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.

இது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் எழுந்து, "ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. 

அது உங்களுக்கு உறுத்தியிருந்தால், எதையோ குறிப்பிடுவதாக நீங்கள் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிடலாம். சபாநாயகர் அவர்களே 'ஊர்ந்து' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'தவழ்ந்து' என்று போட்டுக்கொள்ளுங்கள்" என்று நையாண்டியாகப் பதிலளித்தார்.

சட்டம் ஒழுங்கு குறித்த விவாதம், இப்படியான பதிலடிகளால் மடைமாறி சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

இலையில் மதுபாட்டிலுடன் விருந்து; "போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக கூட்டமே சாட்சி" - இபிஎஸ்

கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைத்தளங்களில் விருந்துடன் இலையில் மதுபாட்டிலும் வைத்து விருந்து நடந்த காணொலி வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம... மேலும் பார்க்க

Padma Awards: ``மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்..'' - பத்ம விருது பெற்ற செஃப் தாமு

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

Padma Awards: அஜித் குமார், அஷ்வின், செஃப் தாமு, பறையிசை வேலு ஆசான்; பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

Padma Awards: பத்ம பூஷண் விருதைப் பெற்றார் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

திமுக அமைச்சரவையில் தொடர்ந்து பந்தாடப்படும் வனத்துறை... என்னதான் பிரச்னை?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் இருந்த வனத்துறை, 2021 தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரா... மேலும் பார்க்க