மதுரையில் கோடைக்கால பயிற்சி வகுப்புகளுக்குத் தடை
மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி பள்ளிகளில் கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் உள்ள பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை அனுமதின்றி எவ்வித கோடைக்கால பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, குழந்தை உயிரிழந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் செய்து மதுரை அண்ணாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது நான்கு வயது மகள் ஆருத்ரா, மழலையர் பள்ளியில் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்து பலியானார்.
இச்சம்பம் தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாளாளர் திவ்யா மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் உள்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.