ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4-வது காலாண்டு வருவாய் உயர்வு!
மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு மற்றும் ஆண்டு முழுவதுக்குமான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ப்ளூ-சிப் பங்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.2 சதவிகிதம் உயர்ந்து தேசிய பங்குச் சந்தையில், பங்குக்கு ஒன்றுக்கு ரூ.1,398.9 ஆக நிலைபெற்றது. அதே வேளையில் மும்பை பங்குச் சந்தையில் இது 2.77 சதவிகிதம் உயர்ந்து அதிகபட்சமாக ரூ.1406.4 ஆக உயர்ந்தது முடிந்தது.
நிறுவனத்தின் 4-வது காலாண்டு செயல்திறன்
2024 - 25 நிதியாண்டின் 4-வது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 22,611 கோடியாகவும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.21,243 கோடியாக இருந்தது. காலாண்டின் செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.2,61,388 கோடியாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் வருவாய் ரூ.2,36,533 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் செயல்திறன்
2024-25 நிதியாண்டில், நிறுவனமானது மிக உயர்ந்த வருடாந்திர ஒருங்கிணைந்த வருவாயாக ரூ.9,64,693 கோடியை பதிவு செய்தது. இது 7.30% ஆண்டு வளர்ச்சி.
ஈவுத்தொகை அறிவிப்பு
பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 2025 ஆம் நிதியாண்டில் தலா ரூ.10/- மதிப்புள்ள ஒரு பங்கு ஒன்றுக்கு ரூ.5.50 இறுதி ஈவுத்தொகையாக இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிக்க: பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!