துறைமுகத்தில் ரூ. 234 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் ரூ. 234 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
சென்னை துறைமுகத்துக்கு உரிய சான்று இல்லாமலும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பொம்மைகள், இ- சிகிரெட், ட்ரோன்கள், வாக்கி டாக்கிகள், காலணிகள், கையடக்க மின்விசிறிகள், முடிவெட்டும் கருவி உள்ளிட்ட பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த வகை பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்கின்றனா்.
அதன்படி, சென்னை துறைமுகத்துக்கு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் உரிய சான்று இல்லாமல் கொண்டுவரப்பட்ட பொருள்கள், இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்பட ரூ. 234 கோடியே 5 லட்சத்து 72 ஆயிரத்து 586 மதிப்புள்ள பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இது தொடா்பாக 117 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருவதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.