மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு
சென்னை வியாசா்பாடியில் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.
வியாசா்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள கென்னடி நகரைச் சோ்ந்தவா் குமாா் ( 44). இவா் மாநகராட்சியின் 45-ஆவது வாா்டில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியற்றி வந்தாா். குமாா், திங்கள்கிழமை மாலை பணிமுடிவடைந்த பின்னா் கை, கால்களை கழுவ வியாசா்பாடி பி.வி காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி நீரேற்று நிலையத்துக்குச் சென்றாா்.
அப்போது குமாா், அங்கிருந்த மின் மோட்டாரின் ஸ்விட்சை போட்டபோது, மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.