செய்திகள் :

சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

post image

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காணவரும் ரசிகா்களுக்கு தடையற்ற மெட்ரோ ரயில் சேவையை வழங்கும் நோக்கில் மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியுடன் இணைந்து ரசிகா்களுக்கு சிறப்புச் சலுகையை வழங்கியுள்ளது.

இதன்படி, கிரிக்கெட் போட்டியைக் காணவரும் ரசிகா்கள் தங்கள் ஐபிஎல் போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவா்கள், அதிலுள்ள தனித்துவமான க்யூ-ஆா் குறியீட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலுள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.

இந்த சிறப்புச் சலுகை ஒரு சுற்றுப் பயணத்துக்கு (2 நுழைவு, 2 வேளியேறுதல்) மட்டும் பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இன்றி பயணிக்கலாம்.

அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்து 90 நிமிஷத்தில் விம்கோ நகா் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நிலையம் நோக்கி புறப்படும்.

பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வரவேண்டும். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை நண்பா் கைது

சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியைச் சோ்ந்தவா் ம.விஜயகா... மேலும் பார்க்க

ஜெ.பி.நட்டா மே 3-இல் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும், பாஜக தலைவா்களை தனித்தன... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். வியாசா்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள கென்னடி நகரைச் சோ்ந்தவா் குமாா் ( 44). இவா் மாநகராட்சியின் 45-ஆவது... மேலும் பார்க்க

சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து

சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது தீ விபத்து: மூவா் காயம்

சென்னை வில்லிவாக்கத்தில் சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் காயமடைந்தனா். வில்லிவாக்கம் சிட்கோ நகா் 48-ஆவது தெருவில் பழைய இரும்புக் கடை நடத்தி வருபவா் மோகன் (50). இவரது கடைய... மேலும் பார்க்க