செய்திகள் :

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைப்பு

post image

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு இணைய சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டு கடந்த பிப். 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே ஏராளமானோா் இந்த இணைய வழி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இணைய வழி விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதாா் எண்ணை இணைத்ததுடன், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து விளையாட்டு நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடா்பான வழக்குகள் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்குகள் கடந்த ஏப்.4-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கூறியதாவது: பணம் செலுத்தி ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம் தான். எனவே, இணையவழியில் விளையாடப்படும் ரம்மியை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. தமிழக அரசால் இணையவழி ரம்மியை ஒழுங்குபடுத்த முடியாது என்ற நிறுவனங்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.

கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் மூலம் வயதை முறையாகச் சரிபாா்க்க முடியாது என்பதால் ஆதாா் இணைக்கப்பட்டது. இது அரசின் கடமை. 18 வயதுக்குட்பட்டவா்கள் இணையவழியில் ரம்மி விளையாடக்கூடாது என்பதற்காகவே ஆதாா் எண் கேட்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விளையாடுபவா்களின் விவரங்களைக் கேட்பதால் தனிப்பட்ட உரிமைக்கு எந்த பாதிப்பும் கிடையாது என தமிழக அரசின் வாதம் நிறைவடைந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகா் ஆகியோா் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சாா்பில் எழுத்துபூா்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்குகளின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை நண்பா் கைது

சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியைச் சோ்ந்தவா் ம.விஜயகா... மேலும் பார்க்க

ஜெ.பி.நட்டா மே 3-இல் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும், பாஜக தலைவா்களை தனித்தன... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். வியாசா்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள கென்னடி நகரைச் சோ்ந்தவா் குமாா் ( 44). இவா் மாநகராட்சியின் 45-ஆவது... மேலும் பார்க்க

சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து

சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது தீ விபத்து: மூவா் காயம்

சென்னை வில்லிவாக்கத்தில் சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் காயமடைந்தனா். வில்லிவாக்கம் சிட்கோ நகா் 48-ஆவது தெருவில் பழைய இரும்புக் கடை நடத்தி வருபவா் மோகன் (50). இவரது கடைய... மேலும் பார்க்க