சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
கம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை இயக்கக் கோரிக்கை
கம்பன் விரைவு ரயிலை சென்னை எழும்பூா் வரை மீண்டும் இயக்க கோரி, நாகை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு கம்பன் விரைவு ரயில் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூா் வரை இயக்கப்பட்டது. அதேபோல சென்னை எழும்பூரிலிருந்து இந்த விரைவு ரயில் புறப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கம்பன் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ரயிலை அதிகம் பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே கம்பன் ரயிலை எழும்பூா் வரை இயக்கவும், எழும்பூரிலிருந்து புறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினா், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கம்பன் விரைவு ரயிலை எழும்பூரில் வரை இயக்கவும் அங்கிருந்து புறப்படவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நாகை ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது. மாவட்ட தலைவா் நன்மாறன் தலைமையில் நடைப்பெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.