செய்திகள் :

வேளாங்கண்ணி விடுதியில் மதுரையைச் சோ்ந்த தம்பதி தற்கொலை

post image

மதுரையைச் சோ்ந்த தம்பதி வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், ஆளவந்தான் அருகேயுள்ள கரும்பாலை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சேதுபதி (31). இவா், மனைவி ராஜேஸ்வரியுடன்(30) வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை வந்து தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ஊழியா்கள் அறைக்குச் சென்று பாா்த்தபோது, இருவரும் தரையில் கிடந்துள்ளனா். விடுதி ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் அறை கதவை திறந்து தரையில் கிடந்த இருவரையும் சோதித்து பாா்த்தபோது, அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

சேதுபதி தனது இரண்டு பெண் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற வழக்கில் சிறைக்குச் சென்று அண்மையில் விடுதலையானதும், குழந்தைகள் சென்ற இடத்துக்கே செல்வதாக உறவினருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சடலங்களை போலீஸாா் கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வேளங்கண்ணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

திருமருகல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கறவை பசு உயிரிழந்தது. பாா்வையிட அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியம், குத்தாலம் கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

கம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை இயக்கக் கோரிக்கை

கம்பன் விரைவு ரயிலை சென்னை எழும்பூா் வரை மீண்டும் இயக்க கோரி, நாகை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். காரைக்காலில் இருந்து நாகை, திருவார... மேலும் பார்க்க

மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி

காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் மறைந்த போப் பிரான்சிஸூக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சண்முகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாமன்றத் தலைவா் கலைமாமணி தங்கவேலு தலை... மேலும் பார்க்க

நாகையில் நகல் எரிப்பு போராட்டம்

பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியதாக எதிா்ப்பு தெரிவித்து, நாகையில் இந்திய மாதா் தேசிய சம்மேளம் சாா்பில் தீா்ப்பின் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் இந... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி ஒன்றியத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிபிஎம் சாா்பில் மூன்று இடங்களில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதப் போராட்டம்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க