நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
`ஏ.டி.எம்களில் ரூ.100, ரூ.200 கட்டாயம் வேண்டும்' - RBI உத்தரவு; மக்களுக்கு லாபம் என்ன?
வங்கி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்கிறோம் என்றால் நமக்கு பெரும்பாலும் கிடைப்பது ரூ.500 நோட்டுகள் தான்.
இதை குறைக்கவும், மக்களிடையே ரூ.100 மற்றும் ரூ.200 பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிக்கையில், "அனைத்து ஏ.டி.எம்களிலும் ரூ.100 மற்றும் ரூ.200 பண நோட்டுகள் மக்களுக்கு கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் 75 சதவிகித ஏ.டி.எம்களில் இந்த வசதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

2026-ம் ஆண்டு, மார்ச் 31-ம் தேதிக்குள் 90 சதவிகித ஏ.டி.எம்களில் இது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ரூ.100, ரூ.200 பண நோட்டுகளை விநியோகிப்பது போன்று ஏ.டி.எம்மில் இருக்கும் ஒரு கேசட்டிலாவது குறைந்தபட்சமாக அந்த நோட்டுகளை வங்கிகள் நிரப்பியிருக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு காரணம் என்ன?
1. பெரும்பாலும் ஏ.டி.எம்களில் ரூ.500 தான் கிடைக்கிறது. இதனால், சிறிய பணப்பரிவர்த்தனைகளின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
2. ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் பணப்புழக்கத்தை மக்களிடையே அதிகப்படுத்தவும் இந்த அறிவிப்பு.