செய்திகள் :

வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக நினைவு நாள்: உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

post image

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் அருகே புதன்கிழமை காலை உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்ரல் 30-இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உண்ணாவிரதம் இருந்து உப்பு அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனா். சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினர்.

இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் நாள் உப்பு அள்ளி,மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நிகழாண்டில் இந்த போராட்டத்தின் 95 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை (ஏப்.30) கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, திருச்சியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட காங்கிரஸ் குழுவினா் வேதாரண்யத்துக்கு வந்தடைந்தனா். அவா்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

.

திருச்சியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு வேதாரண்யத்துக்கு வந்தடைந்த காங்கிரஸ் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது

கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள் பலி

தொடா்ந்து, நாகை மாவட்டம்,வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் வளாகத்தில் புதன்கிழமை காலை உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, மாநில பொருளாளர் ரூபி.மனோகரன், மயிலாடுதுறை எம்.பி சுதா, குருகுலம் நிர்வாக அறங்காவலர் அ.வேதரத்னம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர்.

நிகழ்ச்சியில், திருச்சியில் இருந்து வந்திருந்த சக்தி செல்வகணபதி தலைமையிலான யாத்திரைக் குழுவினர், காங்கிரஸார்,சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.குருகுலம் பள்ளி மாணவிகள் பங்கேற்று தேசபக்தி பாடல்களை பாடினர்.

முன்னதாக,வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுக் கட்டட வளாகத்திலிருந்து பாதயாத்திரையாக சென்று அகஸ்தியம்பள்ளி நினைவு தூண் வளாகத்தை அடைந்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சிவகங்கை: நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை வருவாய கோட்டாட்சியர் அ... மேலும் பார்க்க

கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புக... மேலும் பார்க்க

கரியக்கோயில் அணை திறப்பு: ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் , பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை (ஏப்.30) தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றுப்ப... மேலும் பார்க்க

ஆந்திரம்: கோயில் சுவர் இடிந்து 7 பேர் பலி

விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவர் புதன்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!

நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்... மேலும் பார்க்க

கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள் பலி

கரூர்: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மாமனார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் ... மேலும் பார்க்க