செய்திகள் :

இந்தியா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அமெரிக்கா சமரச பேச்சு!

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் சர்வதேச எல்லையில் தொடர்ந்து 6-வது நாளாக இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதால் போர்ப் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் டாமி புரூஸ் பேசியதாவது:

”இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடம் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் தலைவர்களும் வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வுக்காகவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களை கண்காணித்து வருகின்றோம். பல மட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் தொடர்பில் இருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்திருப்பது போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : அடுத்த 36 மணிநேரத்துக்குள் தாக்குதலுக்கு இந்தியா திட்டம்: பாகிஸ்தான்

புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்திய அரசியலமைப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ரஷிய பயணம் ரத்து!

பிரதமர் நரேந்திர மோடியின் ரஷிய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஜெர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே 1940 - 45 களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜெர்மன் படைகள் சரணடைந்தன... மேலும் பார்க்க

இடிந்த கோயில் சுவரின் கட்டுமானத்தில் ஊழல்: மார்க்சிய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

விசாகப்பட்டினத்தில் இடிந்து விபத்தான சுவரின் கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக மாநில அரசை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

நாட்டின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கெச், ஜியாரத் மாகாணத்தில் தீவிரவாதிகள் இருப்பத... மேலும் பார்க்க

பஹல்காம் எதிரொலி: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவர் அலோக் ஜோஷி!

பஹல்காம் தாக்குதலையைடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையைடுத்து பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

பஹல்காம்: காங்கிரஸின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கோரிக்கைக்கு பவார் ஆதரவு!

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரித்துள்ளார். தாணேவில் நிகழ்ந்த கோயில்... மேலும் பார்க்க