செய்திகள் :

What to watch on Theatre: ரெட்ரோ, Tourist Family, HIT - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

post image

ரெட்ரோ (தமிழ், தெலுங்கு, இந்தி)

Retro

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படத்தில், பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணின் இசையமைத்திருக்கிறார். 'love laughter war' என காதல், ஆக்‌ஷன் மோடில் சூர்யா ரெட்ரோ அவதாரம் எடுத்திருக்கும் இத்திரைப்படம் மே1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Tourist Family (தமிழ்)

Tourist Family
Tourist Family

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி' (Tourist Family). குடும்பத் தலைவனாக சசிகுமார் நடிக்க, சிம்ரன், 'ஆவேசம்' படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் யோகி பாபு, கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து சென்னையில் குடியேறுகிறது ஈழத் தமிழர்கள் குடும்பம். அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறோம் என்பதுதான் கதை. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் பட்ட கஷ்டத்தையும் வலியையும் பற்றித்தான் பேசுவார்கள். அவர்களின் கஷ்டத்தை எவ்வளவு தூரம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதைப் பற்றியாதாக இக்கதைக்களம் அமைந்திருக்கிறது. இத்திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

HIT: The Third Case (தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி)

HIT: The Third Case

சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி, ஶ்ரீனிதி ஷெட்டி, சமுத்திரகனி, சூர்யா ஶ்ரீனிவாஸ் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'HIT: The Third Case'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது மே1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Thunderbolts (ஆங்கிலம்)

Thunderbolts

ஜேக் ஷ்ரையர் இயக்கத்தில் புளோரன்ஸ் பக், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், வயட் ரஸ்ஸல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Thunderbolts'. சயின்ஸ் பிக்‌ஷன் அட்வன்சர், ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது மே1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Costao (இந்தி) - ZEE5

Bromance (மலையாளம்) - Sony LIV

Another Simple Favor (ஆங்கிலம்) - Amazon Prime Video

Exterritorial (ஆங்கிலம்) - Netflix

The Eternaut (ஆங்கிலம்) - Netflix

Asterix & Obelix: The Big Fight - Netflix

Chef’s Table: Legends - Netflix

What to watch on Theatre: மே 1ம் தேதி ரிலீஸ்கள்

The Brown Heart (documentary) - Jio Hotstar

Kull: The Legacy of the Raisingghs (இந்தி) - Jio Hotstar

Black White & Grey: Love Kills (இந்தி) - Sony LIV

Retro: "அன்புள்ள சசி, சிம்ரன், நானி, அஜய் தேவ்கன்..." - மே 1 வெளியாகும் படங்களுக்கு சூர்யா வாழ்த்து!

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்... மேலும் பார்க்க

Ajith: "அஜித் சார் விருது வாங்கினது பெருமை!" - நடிகை ஷாலினி பேட்டி

நடிகர் அஜித் நடிப்பு, ரேஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதை பெற்றிருந்தார் நடிகர் அஜித். விருது பெறும் தருணத்... மேலும் பார்க்க

Ajith: `சிவாஜி கணேசன் டு அஜித்' - பத்ம விருதுகளை வென்ற தமிழ் நடிகர்கள்!

நடிகர் அஜித் குமார் நடிப்பை தாண்டி ரேஸிங் பக்கமும் தற்போது பரபரப்பாக களமாடி வருகிறார். இவருடைய இந்த பன்முகத்தன்மையைப் பாராட்டும் வகையில் இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம... மேலும் பார்க்க

Suriya: "எனக்கு இவ்வளவு அன்பைத் தருகிறீர்கள்; யாரு சாமி நீங்களெல்லாம்?" - மும்பையில் சூர்யா பேச்சு

சூர்யாவின் 'ரெட்ரோ' மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ப்ரோமோஷன... மேலும் பார்க்க

Sachein: "அடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க ரீரிலீஸ்" - தயாரிப்பாளர் தாணு பேட்டி

விஜய் நடித்த 'சச்சின்' திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் திரளாகக் கூடி, படத்தை ஆட்டம், பாட்டம்... மேலும் பார்க்க

Ajith: "மனதளவில் மிடில் கிளாஸ்தான்; சூப்பர் ஸ்டார், தல பட்டங்கள் என்றுமே வேண்டாம்" - அஜித் குமார்

நடிகர் அஜித்குமார் நேர்காணல், திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகவே கலந்துகொள்வதில்லை. சமூக வலைத்தளங்களில்கூட அவர் இருப்பதில்லை.சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, கார் ரேஸிங் எனத் தன... மேலும் பார்க்க