கன்னி : `நிம்மதி பிறக்கும் - 3 முக்கியப் பலன்கள்' - ராகு கேது தரும் பலன்கள்
உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 6-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது மாற்றமானது, சகல வகைகளிலும் உங்களுக்கு யோகம் அளிப்பதாக அமையும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்தமர்வதால், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். சிலரால் உங்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும்.
2. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். கோர்ட் வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். அந்த அளவுக்குப் பணவரவு உண்டு எனலாம்.
3. உங்கள் வாக்குக்கு மரியாதை அதிகரிக்கும். பங்குச்சந்தை போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வர்.

4. பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்று போன கட்டடப் பணிகள், இனி முடிவடையும். வியாபாரிகள் புது யுக்தி களைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவார்கள். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
5. மருந்து, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரிகளின் ஆதரவு பக்கபலமாக இருக்கும்.
கேது பகவான் தரும் பலன்கள்
6. கேது உங்களின் ராசியை விட்டு விலகுகிறார். இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். இனி ஏமாற்றங்கள், தடைகள் யாவும் விலகும். கோபம் குறையும். முகம் மலரும். இனி உடம்பு லேசாகும். மருத்துவச் செலவுகள் குறையும். இனி அனைத்திலும் ஆர்வம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடையே மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
7. குலதெய்வ பிராத்தனைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இனி இடம், பொருள், ஏவலறிந்து பேசுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். ஆரோக்கியம் மேம்படும். முன்கோபம் விலகும். குடும்பத்தினரின் தேவைகளைப் புரிந்து கொள்வீர்கள்.

8. கேதுவின் சஞ்சாரப்படி, வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப் படுவீர்கள். அலுவலகப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
9. திருவெண்காடு சென்று சுவேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் வணங்கி வாருங்கள்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.