செய்திகள் :

சாதிவாரி கணக்கெடுப்பு: "பீகார் தேர்தல் அரசியல் லாபத்துக்காக..." - முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன?

post image

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என இன்று கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குக் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "மிகவும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பைத் தவிர்க்கவும், தள்ளிப்போடவும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு
சாதிவாரிக் கணக்கெடுப்பு

ஆனால் முக்கியமான கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, எப்போது முடிவடையும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "மத்திய அரசு இந்த நேரத்தில் இதை அறிவிப்பது தற்செயலானது அல்ல, பீகார் தேர்தலில் சமூக நீதியின் ஆதிக்கம் தொடரும் நிலையில் இந்த அறிவிப்பில் அரசியல் லாபத்துக்கான துர்நாற்றம் வீசுகிறது.

ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் மக்களைச் சாதி அடிப்படையில் பிளவுபடுத்துவதாகக் குற்றம் சாட்டிய அதே பிரதமர், அவர் பலமுறை அவதூறாகப் பேசிய கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்" என விமர்சித்துள்ளார்.

அத்துடன், "தொலைநோக்குள்ள கொள்கைகளை வகுக்கவும், பலனளிக்கக் கூடிய உண்மையான சமூக நீதியைப் பின்தொடரவும் சாதிவாரி கணக்கெடுப்பு அத்தியாவசியமானது - 'விருப்பத்துக்குரியது அல்ல'. அநீதியின் அளவை அறிந்துகொள்ளாமல் அதனை அழிக்க முடியாது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

தமிழ்நாடு அரசு மற்றும் திமுகவைப் பொறுத்தவரையில் இது எங்கள் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி. நாங்கள்தான் முதன்முதலாகச் சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டி தீர்மானம் நிறைவேற்றினோம். ஒவ்வொரு மேடையிலும் இதற்காகக் குரல் கொடுத்தோம்.

பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்தி வந்தோம். மத்திய அரசு இதைச் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம்.

மற்றவர்கள் மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தும்போது, நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு ஒன்றிய அரசின் விவகாரம்.

மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும், நடத்த வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் கொள்கைகளால் இயங்கும் நமது சமூகநீதி பயணத்தில், திமுகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இது மற்றுமொரு வெற்றி!" எனப் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் அறிவிப்பு என்ன?

வரவிருக்கும் பிரதான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்."அர... மேலும் பார்க்க

காட்பாடி: புதிய சாலையைச் சேதப்படுத்திய கோயில் விழாக்குழு; கொதிக்கும் மக்கள்; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழிஞ்சூர் பகுதியில், கோயில் திருவிழாவையொட்டி மே 2-ம் தேதி மாடு விடும் விழா நடைபெறவிருக்கிறது. இந்த ஒருநாள் விழாவுக்காக, சுற்றுவட்டாரப் பகுதியைச்... மேலும் பார்க்க

Trump 100: அதிபராகி 100 நாட்களை முடிக்கும் ட்ரம்ப்பின் 10 அதிரடி அறிவிப்புகள் - ஒரு பார்வை!

அமெரிக்க அதிபர் என்று ட்ரம்ப்பைச் சொல்வதை விட, அதிரடி அதிபர் என்று கூறினால் சரியாக இருக்கும்.ஆம்... கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி, 'நான், டொனால்ட் ஜான் ட்ரம்ப்...' என்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றதி... மேலும் பார்க்க

"தீண்டாமை குறியீடு... இனி `காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும்" - ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்றளவும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியை மட்டும் சாதிய அடையாளத்தின் அடிப்படையில் `காலனி' என்று அழைக்கப்படுகிறது. ஊர்ப் பகுதி - சித்தரிப்புப் படம்அரச... மேலும் பார்க்க

'மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி...' - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

கடந்த மாதம் மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார். திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க