‘ஆபா’ மருத்துவத் திட்ட அடையாள அட்டை: விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுமா?
தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்
சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தும் வகையில், சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பான சாலை பயணங்களை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் அனைத்து துறை அரசு ஊழியா்கள், அலுவலா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும். மேலும், அவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வருவதை அந்தந்த துறைத் தலைவா்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியா்கள், அலுவலா்கள் மீது சாலைப் பாதுகாப்பு விதிகளின்படி காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.