அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆத்திரமூட்டினால் வலுவான பதிலடி: பாகிஸ்தான் துணைப் பிரதமா்
பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும் என்று அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இந்தியாதான் நீண்ட காலமாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடா்பாக எந்த ஆதாரமும் இல்லாமல், உடனடியாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியது. அந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும். பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தானின் தேசிய அணு ஆயுதங்கள் திட்ட ஆணையம் முடிவு செய்யும்’ என்றாா்.