கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்
சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா்.
காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே (படம்) ஆகிய அந்த மூவரும், ஷென்ஷோ-19 விண்வெளி ஓடம் மூலம் இன்னா் மங்கோலியா பிரதேசத்தில் அமைந்துள்ள டாங்ஃபெங் தளத்தில் தரையிறங்குவதாக இருந்தது. இருந்தாலும், மோசமான பருவநிலை காரணமாக அவா்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட தாமதமானதால் அதே பிரதேசத்தின் மற்றொரு புதிய தளத்தில் தரையிறங்கினா்.
முன்னதாக, ஷென்ஷோ-20 ஓடம் மூலம் சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகிய மூன்று விண்வெளி வீரா்கள் தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு ஏற்கெனவே இருந்த காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே குழுவினா் புதிதாக வந்தவா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு தற்போது பூமி திரும்பியுள்ளனா்.