செய்திகள் :

மீண்டும் கேப்டனாவதை தோனி எதிர்பார்த்திருக்க மாட்டார்: ஆரோன் பின்ச்

post image

ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணி முதல் அணியாக ஐபிஎல் 2025இல் இருந்து வெளியேறியுள்ளது. சொந்த மண்ணில் 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றாலும் த்ரில்லராக சென்றது.

ருதுராஜுக்குப் பதிலாக தோனி கேப்டனாக மாறியிம் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது. இது குறித்து பின்ச் கூறியதாவது:

தோனி சில ஆண்டுகளுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். ஆனால், தற்போது சிஎஸ்கேவுக்கு எதுவும் சாதகமாக இல்லை.

தோனி 43 வயதுடையவர், ஆண்டுக்கு ஒரு முறை அதுவும் ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். ஆனால், அவர் களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மேஜிக்கலானது.

அவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் (ஓய்வறையில்) இருந்து வெளியே வரும்போது, பேட் செய்ய வரும்போது ஏற்படும் சத்தம், எல்லாமே அசாத்தியமானது.

தோனி இன்னும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அவரை நேரில் காணும் வாய்ப்பு இருந்தால், ஒவ்வொரு ரசிகரும் குறைந்தது ஒரு சிஎஸ்கே போட்டியாவது நேரில் பார்த்தாக வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசியதால் ரூ.12 லட்சம் அபராதம் ஸ்ரேயாஷ் ஐயருக்கு விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சேப்பாக... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்... மேலும் பார்க்க

வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார். சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் ... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் ஒரு டீசல் என்ஜின்..! வருண் ஆரோன் புகழாரம்!

மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து முன்னாள் வீரர் வருண் ஆரோன் புகழ்ந்து பேசியுள்ளார். புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. ஐபிஎல் த... மேலும் பார்க்க

சாம் கரண் ஒரு போராளி, டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து: எம்.எஸ். தோனி

பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கேட்ச்சுகளை தவறவிடாமல் பிடிக்க வேண்டும் எனக் கூறினார். சேப்பாகில் நேற்றிரவு (ஏப்.30) நடந்த போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்ற... மேலும் பார்க்க

ஐபிஎல்: வெளியேறியது சென்னை! பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. இந்தத் தோல்வியை அடுத்து சென்னை அணி பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியே... மேலும் பார்க்க