செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

post image

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. என்.ஐ.ஏ. இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பஹல்காமில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஹல்காம் சம்பவத்திற்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் உளவு பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப். 15 ஆம் தேதி பஹல்காம் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் பயங்கரவாதி ஒருவர் உளவு பார்த்துள்ளார். அங்கு பாதுகாப்பு பலமாக இருந்த காரணத்தால் தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அரு பள்ளத்தாக்கு, பெடப் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் பயங்கரவாதிகள் உளவு பார்த்துள்ளனர். இந்த 3 பகுதிகளிலும் போதுமான பாதுகாப்புப் படையினர் இருந்ததால் தாக்குதலை தவிர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஏப். 22ஆம் தேதிக்கு இரு நாள்களுக்கு முன்னதாகவே அவ்விடத்திற்கு பயங்கரவாதிகள் வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஒரு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொண்டதாகத் தெரிகிறது. இதன்படி, சிம் கார்டு இன்றி குறுகிய தூரத்துக்கு அவர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | 'சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு' - திருமாவளவன்

மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!

ஹரியாணா, பஞ்சாப் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்துவரும் வார்த்தைப் போரில் ஆம் ஆத்மியை ஆளும் பஞ்சாப் அரசு தில்லியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் மோசமான அரசியலில் ஈடுபடுவதாகத் தில்லி பாஜ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் சாலை ஒப்பந்ததாரர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் சாலை ஒப்பந்த மேற்பார்வையாளர் ஒருவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.புதன்கிழமை இரவு மஹுவாதன்ர் காவல் நிலையப் பகுதியில் உள... மேலும் பார்க்க

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி... மேலும் பார்க்க

நாடுகடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர் ஒருவர் திடீர் மரணம்!

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க