ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட...
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்!
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம், 2024-ல் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவிலுள்ள அவரது ரசிகர்கள் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்க முயன்றபோது அது சட்டப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
அதன் அடிப்படையில், பாகிஸ்தான் பிரபலங்கள் பலரது சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பல யூடியூப் சேனல்களும், இந்தியாவுக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பியதால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிகெட் வீரர்களான சோயிப் அக்தர், பாசித் அலி மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோரது யூடியூப் சேனல்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்படவில்லை.
முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களான மஹிரா கான் மற்றும் அலி ஜாஃபர் ஆகியோரது இன்ஸ்டாகிராம் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!