செய்திகள் :

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: சமனில் முடிந்த பார்சிலோனா - இன்டர் மிலன்!

post image

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மோதிய பார்சிலோனா - இன்டர் மிலன் ஆட்டம் சமனில் முடிந்தது.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியும் இன்டர் மிலன் மோதின.

இந்தப் போட்டியில் 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமனில் முடிந்தது.

இன்டர் மிலன் அணி போட்டியின் முதல் நிமிஷத்திலேயே கோல் அடுத்து அசத்தியது.

அடுத்ததாக கார்னர் வாய்ப்பில் 21, 63ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தியது.

இந்த இரண்டு கோல்களையும் டென்ஜெல் டம்பிரைஸ் கார்னர் வாய்ப்பில் அடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அவர் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

பார்சிலோனா அணி கார்னர் வாய்ப்பில் தவறவிட்டாலும் அணியாக சிறப்பாக விளையாடியது.

போட்டியில் 72 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அத்துடன் 91 சதவிகித துல்லியத்துடன் பந்தினை செய்ததும் கவனிக்கத்தக்கது.

முக்கிய வீரர்களுக்கு காயம்

இன்டர் மிலன் அணியின் கேப்டன் லௌடாரோ மார்டினெஸ் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.

பார்சிலோனா அணியில் ஜூல்ஸ் குன்டே காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இரு வீரர்களுமே அந்த அணிகளுக்கு மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

இண்டர் மிலன் அணியின் பலமான டிஃபென்ஸுகளைத் தாண்டி பார்சிலோனா 3 கோல்கள் அடித்தது பெரிய விஷயம் என்றே ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

இந்த இரு அணிகளுக்குமான சாம்பியன் லீக்கின் 2ஆம் கட்ட அரையிறுதி போட்டி மே.7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் அப்டேட்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உரு... மேலும் பார்க்க

துடரும் இயக்குநர் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், அர்ஜுன் தாஸ்!

துடரும் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் தருண் மூர்த்தியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’சவுதி வெள்ளக்கா' படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால்... மேலும் பார்க்க

கூலி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

கூலி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்உள்ளீடு:நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் செளபின் ஷாயி... மேலும் பார்க்க

ரெட்ரோ - திரையரங்கம் முழுவதும் பெண் ரசிகைகள்! எங்கே?

ரெட்ரோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பெண்களுக்காக மட்டும் திரையிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக... மேலும் பார்க்க

100-ஆவது போட்டியில் விளையாடிய 17 வயது சிறுவன்..! அடுத்த மெஸ்ஸியா?

பார்சிலோனா அணியில் விளையாடும் 17 வயதான லாமின் யமால் தனது 100-ஆவது போட்டியில் விளையாடியுள்ளார். ஸ்பானிஷைச் சேர்ந்த லாமின் யமால் 2023 முதல் பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார். நேற்றிரவு சாம்பியன்ஸ் ல... மேலும் பார்க்க

நீ சிங்கம்தான்! கோலியை புகழ்ந்த சிலம்பரசன்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நடிகர் சிலம்பரசன் புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில் அவருக்கு பிடித்த பாடல் எது? என்று ... மேலும் பார்க்க