கூலி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
கூலி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்உள்ளீடு:
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் செளபின் ஷாயிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
அதுமட்டுமின்றி, நடிகர் அமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் பாலிவுட் ரசிகர்களும் படத்திற்காகக் காத்திருக்கின்றனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளைத் துவங்கியுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பான் இந்திய வெளியீடாக அதிக திரைகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: ரெட்ரோ - திரையரங்கம் முழுவதும் பெண் ரசிகைகள்! எங்கே?