ரசவாதிக்கு 3 விருதுகள்! சிறந்த நடிகர் விருது பெறும் அர்ஜுன்தாஸ்!
ரசவாதி திரைப்படத்துக்காக நடிகர் அர்ஜுன்தாஸுக்கு 2-வது முறையாக சிறந்த நடிகர் விருது வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவான ரசவாதி படத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் அவரது நடிப்புக்கு பலரால் பாராட்டுகளைப் பெற உதவியது. இந்த நிலையில், தாதா சாகிப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ரசவாதி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தப் படத்துக்கு ஏற்கெனவே 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ரசவாதி திரைப்படத்துக்கு, லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி மற்றும் வடிவமைப்புக்கான விருதும், நியூஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரே படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருதை இருமுறை பெறவுள்ளார், நடிகர் அர்ஜுன்தாஸ்.