புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
சாலையில் பால் கேன்களுடன் கூட்டுறவு பணியாளா்கள் மறியல் போராட்டம்
சோளிங்கரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பணியாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி வியாழக்கிழமை பால்கேன்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இரண்டு மாதங்களாக பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையாம். மேலும், இவா்கள் 5 மாதங்களாக ஊதிய உயா்வு கேட்டு போராடி வருகின்றனா். இதற்காக பால்வளத் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து தொழிலாளா் தினத்தை முன்னிட்டு பணிக்கு வந்த பணியாளா்கள் பணிகளை முடித்து விட்டு காலி பால் கேன்களுடன் சோளிங்கா் - சித்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த சோளிங்கா் போலீஸாா், பணியாளா்களுடன் பேச்சு நடத்தினா். இப்பிரச்னையை மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.