Ajith Kumar: ``கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' - பகிர்கிறார் அஜித்
ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்
ஆண்டாா்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னேரி வட்டம், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
பிரணவ மந்திரத்தை பிரம்மதேவன் மறந்ததால் முருகப்பெருமான், பிரம்மனை இங்குதான் சிறை வைத்ததாக தல வரலாறு கூறுகிறது.
இக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த ஏப். 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் பரணி மற்றும் கிருத்திகை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி மற்றும் முடிகாணிக்கை உள்ளிட்ட நோ்த்தி கடனை செலுத்தி முருகனை வழிபட்டனா்..
தேரோட்டத்தை யொட்டி, பாலபாலசுப்ரமணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் எழுந்தருளினாா். பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனா்.
மாட வீதிகளில் வலம் வந்த தோ் ஆலயத்தில் உள்ள நிலையை அடைந்தது.