செய்திகள் :

VJ Siddhu: 'பயங்கரம் இல்ல பாஸ் டயங்கரம்!' - இயக்குநராகும் வி.ஜே சித்து!

post image

நகைச்சுவை ப்ராங்க் நிகழ்ச்சிகள் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் வி.ஜே. சித்து.

தற்போது 'வி.ஜே. சித்து விலாக்ஸ்' என்ற தன்னுடைய சொந்த சேனல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்திருக்கிறார் சித்து.

இவரும் ஹர்ஷத் கானும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காணொளிகளை எதிர்பார்த்து பாலோ செய்யும் ரசிகர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள்.

VJ Siddhu movie - Dayangaram
VJ Siddhu movie - Dayangaram

சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் ப்ரதீப் ரங்கநாதனின் கேங்கில் இருப்பவராக அன்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் சித்து.

இதன் பிறகு அவர் கூடிய விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டது.

தற்போது அத்திரைப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தை வி.ஜே. சித்துவே இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு 'டயங்கரம்' என தலைப்பு வைத்து, அறிவிப்பு காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

VJ Siddhu movie - Dayangaram
VJ Siddhu movie - Dayangaram

இந்த அறிவிப்பு காணொளியை நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

Kingdom: `இந்த மேதை யாரென..' - அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கிங்டம்' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'ஜெர்சி' பட இயக்குநர் கெளதம் டின்னனூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அன... மேலும் பார்க்க

Retro: ``கார்த்திக் சுப்புராஜ் அது மாதிரி கதை வெச்சிருக்காரு; அதை தான் முதல்ல சொன்னாரு!'' - சூர்யா

சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'Love, Laughter, War' என்ற மூன்று பகுதிகளிலும் சூர்யா தனது நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார். அதேபோல், பூஜா ஹெக்டே தனது 'ருக்மண... மேலும் பார்க்க

``கட்டிட விழா நடந்தால் தான் எனக்கு திருமணம்; அதற்கு 9 வருடங்கள் ஆகிவிட்டது, ஒரு வழியா..'' - விஷால்

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் தெரிவித்திருக்கிறார்.பெப்சி அமைப்பு தொழிலாளர் தினத்தை (மே 1) நேற்று கொண்டாடி இருக்கின்றனர். இதில் நடிகர் ... மேலும் பார்க்க

Ajith: ``ஒரு குற்றவுணர்ச்சியால் தான் `நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தேன்!'' - அஜித் ஓப்பன் டாக்

அஜித் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடக... மேலும் பார்க்க

`பஞ்சதந்திரம் படத்த பார்த்திட்டுதான் தூங்குவேனு ராணுவ வீரர் சொன்னாரு' - கிரேஸி மோகன் பற்றி ஜெயராம்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய '... மேலும் பார்க்க

Ajith Kumar: ``கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' - பகிர்கிறார் அஜித்

கடந்த திங்கட்கிழமை நடிகர் அஜித் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். விருது பெற்ற கையோடு இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு பேட்டிகள் கொடுத்திருக்கிறார... மேலும் பார்க்க