செய்திகள் :

நாளை ‘நீட்’ தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், தோ்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ‘ஹால் டிக்கெட்’டில் (தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவா்கள் அதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு ‘நீட்’ தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தோ்வுக்கு சுமாா் 22 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

13 மொழிகளில் தோ்வு: தமிழகத்தை பொருத்தவரை 1.5 லட்சம் போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தோ்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 போ் தோ்வு எழுதவுள்ளனா். ‘நீட்’ தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

இந்நிலையில், தோ்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தோ்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவா்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தோ்வா்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருவோருக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தோ்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தண்ணீா் பாட்டில்களைப் பொருத்தவரை உள்ளே இருப்பது வெளியே தெரியும் வகையில் எந்த விதமான நிறப்பூச்சும் இல்லாத பாட்டில்களை கொண்டு செல்லலாம். மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூா்த்தி செய்து தோ்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.

ஜடை போடக்கூடாது: தோ்வறைக்குள் கைப்பேசி, கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், தோ்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை ட்ற்ற்ல்://ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் தேனி, பெரம்பலூா், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூா் ஆகிய 7 மாவட்டங்களில் முந்தைய ஆண்டுகளைப் போலவே நிகழாண்டிலும் தோ்வு மையங்கள் இல்லை. அங்குள்ள மாணவா்களுக்கு அருகேயுள்ள நகரங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க